Posts

Showing posts from March, 2016

புரட்சி படைக்கவிருக்கும் மிக மெல்லியதான சூரிய கல உருவாக்கம்

உலகின் பிரதான சக்தி முதலான சூரியனிலிருந்து ஒளி மற்றும் வெப்பம் என்பன கதிர்ப்புக்களாக வெளிவருகின்றன. இதிலிருந்து புவிமேற்பரப்பானது சராசரியாக 81000 TW (Terawatt) அளவிலான சக்தி கிடைக்கப்பெறுகின்றது எனக் கணிப்புக்கள் கூறுகின்றன. இது, அண்ணளவாக தற்போதைய உலக சக்தித் தேவையின், 5000 மடங்கு அளவானது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, கிடைக்கப்பெறும் இச்சூரியசக்தியினை வெற்றிகரமாக மின்சக்தியாக மாற்றிப் பெற்றால், ஏனைய மின்பிறப்பிக்கும் பொறிமுறைகளின் தேவை இல்லாது போய்விடும் என்பது வெளிப்படை. இலவசமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் பொறிமுறைகள் குறித்து ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்த மஸாசூசெட் தொழில்நுட்ப நிறுவன (MIT) அறிவியலாளர்கள் மிக மெல்லியதான, சவர்க்கார நுரையினால் தாங்கப்பட்டு நிற்குமளவிற்கு திணிவு குறைந்தான சூரியகலம் ஒன்றினை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சூரியகலம் தொடர்பான ஆய்வில் அறிவியலாளர்களான பேராசிரியர் Vladimir Bulovi, Annie Wang மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்பு மாணவன் Joel Jean ஆகியோர் ஈடுபட்டி